Income Tax Returns
Income Tax Returns
இந்திய வருமானவரி சட்டம், 1961ல் இந்திய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 01-04-1962 முதல் இந்திய வருமான வரிச் சட்டம் செயல்படத் தொடங்கியது. வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசின் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறையானது இந்திய அரசின் நிதி அமைச்சக வருவாய்த்துறையின் நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் இயங்குகிறது. வருமான வரித் துறையினர்க்கு, வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது, படிவத்தில் நிரந்த கணக்கு எண் (PAN) கட்டாயமாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும். வருமான வரி படிவத்தை ஆண்டு தோறும் சூலை 31-ஆம் தேதிக்குள் வருமானத்துறையினரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு முன் மார்ச்சு மாத இறுதிக்குள் முன்கூட்டியே வருமானவரி கட்டியிருக்க வேண்டும். நிதியாண்டில் அனைத்து இனங்கள் மூலம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள். நிதியாண்டில் ரூபாய் 10,000/-க்கு மேல் வங்கி/கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து வட்டி ஈட்டுபவர்கள். நிதியாண்டில் 5 இலட்சமும் அதற்கு மேலும் தங்க நகைகள் மற்றும் தங்கத்தை வாங்குபவர்கள். கடன் அட்டை மூலம் ஆண்டிற்கு இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேலும் பொருட்களை கொள்முதல் செய்பவர்கள். ரூபாய் முப்பது இலட்சம் மற்றும் அதற்கு மேலும் மதிப்புடைய அசையாச் சொத்துக்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள். வங்கி சேமிப்பு கணக்கில் ரூபாய் பத்து இலட்சமும் அதற்கு மேற்பட்ட தொகை இருப்பாக வைத்திருப்பவர்கள். ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை பரஸ்பர நிதியில் முதலீடு செய்துள்ளவர்கள். ரூபாய் ஐந்து இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்கள். ரூபாய் ஒரு இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள். ரூபாய் ஐந்து இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை இந்திய ரிசர்வ் வங்கியின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்கள்.